"பரோட்டா சாப்ட்டு எத்தன நாளாச்சு"... 'சீக்கிரம் போய் வாங்கிட்டு வருவோம்'... சுவரேறி குதித்து 'பரோட்டா' வாங்கி திரும்பிய கொரோனா 'நோயாளி'... 'பகீர்' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதிலும், தொடக்கத்தில் சென்னையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சென்னையில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், மற்ற மாவட்டங்களில் தற்போது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை சுமார் 1200 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கன்னியாகுமரியில் கொரோனவால் பாதிக்கப்பட்ட ஒருவர், அங்குள்ள அரசு மருத்துவமனையின் அருகே அமைந்துள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவர் அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் கொண்டவராக தெரிகிறது. இதன் காரணமாக, கொரோனா முகாமில் இருந்த அந்த நபர், பரோட்டா வாங்க வேண்டி சுவரேறி குதித்து, ஹோட்டலுக்கு சென்று பரோட்டா வாங்கி விட்டு மீண்டும் முகாமிற்கு திரும்பியுள்ளார்.
இதனை சிசிடிவி மூலம் மருத்துவர்கள் கண்டறிந்த நிலையில், மருத்துவர்கள் அவரை கண்டித்துள்ளனர். தொடர்ந்து, அந்த ஹோட்டலில் அவருடன் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பாக விசாரித்து வருகின்றனர். மற்றவர்களுக்கு தொற்று பரவும் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையிலும், மக்கள் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மற்ற செய்திகள்
