'பந்து' வீச்சாளருடன் 'செல்ஃபி' எடுத்த இளைஞர்... "மேட்ச் ஆடாம இங்க என்ன பண்ணிட்டு இருக்காரு??"... சரி, கூகுள் பண்ணி பாப்போம்... பதிலைப் பார்த்து தலைசுற்றி நின்ற 'இளைஞர்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபொதுவாக, மக்கள் தாங்கள் வெளியே செல்லும் இடங்களில் எதாவது பிரபலங்களை காண நேர்ந்தால் ஆனந்தத்தில் உடனடியாக அவர்களுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்வர்.

அப்படி பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப் என்பவருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி இன்டர்நெட்டில் வைரலாகி மீம் கண்டெண்டாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், அந்த செல்ஃபி எடுத்ததும் வீட்டிற்கு திரும்பிய இளைஞர், கூகுளில் ஹாரிஸ் ரவூப் ஏன் கிரிக்கெட் தொடர் விளையாட வேண்டி இங்கிலாந்து செல்லவில்லை என தேடிப் பார்த்துள்ளார். அப்போது தான் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இளைஞருக்கு ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது. ஹாரிஸ் ரவூப் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டதன் காரணமாக தான் அவர் பாகிஸ்தானில் இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த இளைஞர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தான் எடுத்த புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து பின் இங்கிலாந்து கிளம்பி சென்றனர். ஹாரிஸ் ரவூப் அணியில் தேர்வாகி இருந்த நிலையில், கொரோனா உறுதியான காரணத்தினால் இங்கிலாந்து செல்லாதது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
