'இந்தியா'வோட... இந்த '8' மாநிலங்கள்ல தான்... 85% பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டு இருக்காங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 85 சதவீத பாதிப்பு மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, குஜராத், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 8 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல உயிரிழப்பிலும், 87 சதவீத உயிரிழப்பும் இந்த 8 மாநிலங்களில் தான்பதிவாகியுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் குழுவிடம் ஒப்படைத்தது. இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தான் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சிகிச்சைகளை மேம்படுத்த நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
உலக அளவின் மொத்த பாதிப்பில் அமெரிக்கா 25 சதவீதமும், பிரேசில் 12.5 சதவீதமும் பதிவாகியுள்ள நிலையில், இந்தியாவின் பாதிப்பு ஒட்டுமொத்த உலக எண்ணிக்கையில் 5.3 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
