"அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'!!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith | Aug 02, 2020 04:35 PM

துபாயில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார். மலையாளியான இவர், கடந்த 32  ஆண்டுகளாக துபாயில் குடும்பத்துடன் தங்கி தொழில் செய்து வருகிறார்.

Dubai memory of son man sponsor for 61 indians flight tickets

தற்போது உலகம் முழுவதும் கொரோனா தொற்று  காரணமாக உலக மக்கள் அனைவரும் கடும் அவதிப்பட்டு வரும் நிலையில், இந்தியாவை சேர்ந்த பலர் துபாயில் வேலையில்லாமல்  திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக, சுமார் 190 பேரை மீண்டும் இந்தியா அனுப்ப ஒரு தன்னார்வ அமைப்பு முடிவு செய்துள்ளது. அதில் ஒருவரான கிருஷ்ணகுமார், 61 பேருக்கான விமான கட்டணமான சுமார் 14 லட்சத்தை அளித்து அவர்கள் சொந்த ஊர் செல்ல உதவி செய்துள்ளார். கடந்த ஆண்டு உயிரிழந்த தனது இளைய மகனின் நினைவாக இந்த உதவியை அவர் செய்துள்ளார்.

'இந்த கடினமான சூழ்நிலைகளில் பலர் தங்களது சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மிகுந்த வேதனையுடன், இங்கு தனது நாட்களை கழித்து வருகின்றனர். அதனால் அவர்கள் இங்கு அவதிபடாமல் சொந்த ஊர் சென்று தங்களது அன்பானவர்களுடன் சேர்ந்து இருக்க வேண்டி இந்த உதவியை செய்தேன்' என அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பேரிடர் பரவ ஆரம்பித்தது முதலே பலருக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் உட்பட பண உதவி வரை கிருஷ்ணகுமார் செய்து வந்துள்ளார். 'நாம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. எனது இளைய மகன் உயிரிழந்த போது தான் எனக்கு அது புரிந்தது' என்றார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிருஷ்ணகுமாரின் இளைய மகன் ரோகித், கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இதிலிருந்து இன்னும் கிருஷ்ணகுமார் முழுமையாக மீளாத நிலையில், அதன் பின்னர், மகனின் நினைவாக தன்னாலான உதவியை பலருக்கு செய்து வருகிறார் கிருஷ்ணகுமார். மேலும், கேரளாவின் கல்வித்துறையிலும் தொண்டு நடவடிக்கைகளில் கிருஷ்ணகுமார் ஈடுபட்டு வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai memory of son man sponsor for 61 indians flight tickets | World News.