‘இவங்கலாம் இருக்குற கட்சியில நம்மளால இருக்க முடியாது!’ - பாஜகவில் இருந்து விலகிய நடிகை.
முகப்பு > செய்திகள் > இந்தியாகுடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவானவர்களும் எதிரானவர்களும் ஒரே இடத்தில் கூடியபோது உண்டான கலவரத்தில் பலர் பலியாகியதாகவும், சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, அன்ராக் தகூர் உள்ளிட்டோர் இக்கலவரம் தொடர்பாகவும், குடியுரிமை சட்டம் தொடர்பாகவும் பேசிய கருத்துகளில் உடன்பாடில்லை என்பதால், அவர்கள் இருக்கும் பாஜகவில் இருந்து, தான் விலகுவதாக மேற்குவங்க நடிகையும், அரசியல்வாதியுமான சுபத்ரா முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தின் பிரபல சீரியல் நடிகையும், 2013 முதல் பாஜகவில் இயங்கிய அரசியலாளருமான சுபத்ரா முகர்ஜி, தனது இந்த முடிவை ராஜினாமா கடிதமாக மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ்க்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், நேரில் சென்று தெரிவித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
