“உங்க ஆபாச அரசியல் என்கிட்ட செல்லாது!”.. பாலின ரீதியான விமர்சனத்துக்கு ஜோதிமணி பதிலடி!.. களமிறங்கிய 'நெட்டிசன்கள்'.. அதிர்ந்த ட்விட்டர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 20, 2020 10:33 AM

நேற்று முன்தினம் நியூஸ்7 தொலைக்காட்சியில் புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கைகொடுக்க மறுக்கின்றவா எதிர்க்கட்சிகள் என்ற தலைப்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் நடந்த “வார்த்தைப் போர்” சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

BJP panellist made personal remarks over Congress woman MP in tv show

இதில், திமுக எம்.பி கலாநிதி வீராசாமியும், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியும் கலந்து கொண்டனர். பாஜக தரப்பிலிருந்து கரு.நாகராஜன் பங்கேற்றிருந்த நிலையில், முன்னதாக பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, புலம் பெயர் தொழிலாளர்கள் மீது பாஜக கருணையற்று நடந்து கொள்வதாகவும், குறிப்பாக வெளிமாநிலத்துக்கு தமிழகத்தில் இருந்து சென்ற புலம் பெயர் தொழிலாளர்களைப் பற்றி அரசு கவலைப் படவில்லை என்றும் தொடர்ச்சியாக மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை வாதமாக அடுக்கினார்.  மேலும் "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் களப்பணி ஆற்றிவருவதால்தான், இன்னும் மக்கள் பிரதமரை கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள்" என்று பேசினார். இதனால் கோபடைந்த பாஜகவைச் சேர்ந்த கரு.நாகராஜன், ஜோதிமணியை கடுமையான முறையில் பாலின ரீதியிலாக தனிப்பட்ட முறையில் விமர்சித்ததோடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான விளக்கத்தை அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜோதிமணி, “இப்படியான மனிதர்களை விவாதத்துக்கு அழைத்தால், என்னை விவாதத்துக்கு அழைக்காதீர்கள், மக்களின் பிரதிநிதியாக கேள்விகளை கேட்டால் இப்படியெல்லாம் பேசுவீர்களா? ” என்று பேசிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து, திமுக எம்.பி கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

மேலும் இது தொடர்பாக தனது ட்விட்டரிலும், ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று நினைக்கும் அவர்களின் ஆபாச அரசியல் தன்னிடம்

வெற்றியடையாது  என்று ஜோதிமணி பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து ஜோதிமணியை ஆதரிப்பவர்கள் #IStandwithJothimani  என்கிற ஹேஷ்டேகில் சமூக ஊடகங்களில்

கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதேபோல், “பிரதமரை கல்லால் அடித்திருப்பார்கள்” என்று ஜோதிமணி பேசியதையும்

பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே யார் மனதாவது புண்பட்டிருந்தால் வருந்துவதாக கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.