‘சிவப்பு சாயம்’.. கால் வளையத்தில் ‘மர்ம எண்கள்’.. பாகிஸ்தானில் இருந்து பறந்த வந்த புறா?.. பீதியில் மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த புறாவின் காலில் வளையம், மர்ம எண்கள் குறிப்பிட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் இந்திய எல்லைகளை ரகசிகயமாக கண்காணிக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதாகவும், அதற்காக கேமரா பொருத்திய டுரோன்களை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவர்களது இந்த முயற்சியை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வருகிறது. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டம் ஷிலயரி என்ற கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறா ஒன்று வட்டமிட்டுக்கொண்டு இருந்துள்ளது.
மேலும் அந்த புறாவின் இறக்கையில் இளஞ்சிவப்பு நிற சாயம் பூசப்பட்டிடுந்தது. இதனால் சந்தேகமடைந்த கிராம மக்கள் அந்த புறாவை பிடித்து பார்த்துள்ளனர். அப்போது அந்த புறாவின் காலில் சில வளையங்கள் இருந்ததும், அதில் சில எண்கள் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் இந்த புறா பாகிஸ்தானில் இருந்து அனுப்பட்டிருக்கலாம் என்றும், காலில் பொருத்தப்பட்டுள்ள வளையங்களில் உள்ள எண்கள் ஏதேனும் ரகசிய தகவல்களாக இருக்கலாம் என்றும் சந்தேகமடைந்த கிராம மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பிடிப்பட்ட புறாவை கைப்பற்றி விசாரணைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து தெரிவித்த போலீஸ் அதிகாரி ஷைலேந்திர குமார் மிஷ்ரா, இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், புறா எங்கிருந்து வந்தது, அதன் காலில் பொருத்தப்பட்டுள்ள வளையங்கள், எண்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
