VIDEO : "'பைக்'குல வந்த ரிப்போர்ட்டர புடிச்சு"... அடிச்சு, அவரு 'தலை'யிலேயே சுட்ருக்காங்க... 'மகள்'கள் கண்முன்பே நடந்த கொடூரம்- அதிர்ச்சி வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த பத்திரிக்கையாளரான விக்ரம் ஜோஷி என்பவர் தனது குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், விக்ரம் ஜோஷி நேற்று இரவு தனது மகள்களுடன் காசியாபாத்தின் விஜய் நகர் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், இருசக்கர வாகனத்தை வழி மறித்துள்ளனர். வழிமறித்த அந்த கும்பல் அவரை தாக்கி விட்டு அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதன் காரணமாக, அவர் தலையில் குண்டு பாய்ந்த நிலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் ஆபத்தான முறையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஜோஷி குடும்பத்திற்கு தெரிந்தவர்கள் என அறியப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், அவர்கள் தாக்கியது தவிர சுட்டது தொடர்பான காட்சிகள் தெளிவாக இல்லை. மர்ம கும்பல் சுட்டு விட்டு சென்றதும் அவரது மகள், கதறியழுதுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, விக்ரம் ஜோஷி சிலர் மீது புகார் அளித்துள்ளார். அது தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அந்த வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்கள் இந்த தாக்குதல் நடத்தியிருக்கலாம் என விக்ரம் ஜோஷியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Journalist Vikram Goshi is in critical condition after he was shot in the head in #Ghaziabad by men accused of molesting her niece. He had recently filed police complaint against the molester. He was with daughters during the attack. Police ignored his complaint @Uppolice pic.twitter.com/HoAwiCsj3d
— Saurabh Trivedi (@saurabh3vedi) July 21, 2020