இது ஒரு அண்ணன் பண்ற விசயமா...? 'என்ன காப்பாத்துங்க'ன்னு கதறிய தங்கச்சி..., - 13 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் 13 வயது சிறுமியை அண்ணனே பாலியல் தொழில் நடத்துபவர்களிடம் விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தன் தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த 13 வயது சிறுமியை, முதல் மனைவிக்கு பிறந்த மகன் ஒருவர் ஆந்திராவின் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் சிங்காரயகொண்டா நகரில் இருக்கும் விபச்சார கும்பலுக்கு விற்றுள்ளார். தந்தைக்கும் அவரின் இரண்டாவது மனைவிக்கும் சொத்து காரணமாக அடிக்கடி சண்டை ஏற்படும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக சிறுமியும் அவரது தாயாரும் நெல்லூர் மாவட்டத்தின் காவலியில் தங்கியிருந்துள்ளனர்.
இந்நிலையில் ஜூலை மாதம் கடந்த 12ம் தேதி (ஞாயிற்றுகிழமை), முதல் மனைவிக்கு பிறந்த சிறுமியின் அண்ணனும், அவரது மனைவியும் சேர்ந்து சிறுமியை வெளியே கூட்டிச்செல்வது போல், சிங்காரயகொண்டாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் செயல்படும் விபச்சார கும்பலிடம் தன் தங்கையை ரூ.27,000 க்கு விற்றுள்ளார்.
என்ன செய்வதென்று அறியாத சிறுமி கடந்த ஜூலை 18 தேதி எப்படியோ செல்போன் கிடைத்து போலீஸ் எண் 100க்கு தொடர்புகொண்டு, தான் விபச்சார கும்பலிடம் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மைனர் சிறுமியை மீட்க காவல்துறையினரின் இரகசிய நடவடிக்கை மேற்கொண்டு, சிறுமி போன் செய்த இடத்தை கண்டுபிடித்து போலீசார் அந்த இடத்திற்கு வந்து அவளை மீட்டனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், குடும்பத்தாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிறுமியின் வாக்குமூலத்தின் பெயரில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டம், 2012 மற்றும் ஒழுக்கக்கேடான போக்குவரத்து (தடுப்பு) சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய குற்றங்கள் கந்துகூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் விபச்சார மோசடி நடத்தப்பட்ட வீட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் சிறுமியின் அண்ணன் மற்றும் அவரது மனைவியின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
