மாப்ள நீங்க பண்றதுல கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா...? 'கள்ளக்காதலுக்கு நடந்த பஞ்சாயத்து...' ஸ்க்ரூட்ரைவர் எடுத்து ஒரே குத்து...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅகமதாபாத்தில் கள்ளகாதல் பிரச்சனையை தீர்த்து வைக்க வந்த மனைவியின் தம்பியை ஸ்க்ரூட்ரைவரால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தில் ஃபதேவாடி பகுதியில் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டிருக்கும் கணவர் இம்ரானுக்கும் அவரது மனைவி சமீனபானு வேஜல்பூருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் வாக்குவாதம் முற்றி கைகலப்பும் ஏற்பட்டுள்ளது. தன் கணவர் செய்த செயலை குறித்து தன் தாய் வீட்டிற்க்கு தெரிவித்துள்ளார் சமீனபானு. மேலும் சமாதானம் பேச வந்த தன் மனைவியின் தம்பியை ஆத்திரத்தில் ஸ்க்ரூட்ரைவரால் குத்தி கொலை செய்துள்ளார் இம்ரான்.
தம்பியின் மரணத்தை அடுத்து தன் கணவர் இம்ரான் கான் மீது சமீனபானு போலீஸில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில், 'எனக்கும் எனது கணவர் இம்ரான் கானுக்கும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிகிறது. மேலும் எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 3 வருடங்கள் சந்தோசமாக இருந்தோம் ஆனால் அதன் பின் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அவரின் நடத்தைகள் குறித்து நான் கேள்விகேட்டால் என்னை துன்புறுத்த செய்வார் மேலும் சண்டைகளும் ஏற்படும். அவரின் இந்த நடத்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என்றும் மிரட்டுவார். வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்கமாட்டார்.' எனக்கூறியுள்ளார்.
மேலும், 'இத்தனை கால அவஸ்தை பொறுக்க முடியாமல் தான் என்னால் இரண்டு நாட்களுக்கு முன்பு எனது பெற்றோரின் இடத்திற்கு திரும்பினேன். என் கணவர் என் பெற்றோர் வீட்டிற்கு வந்து சண்டையிட்டார். என் தம்பி இந்த விஷயத்தில் தலையிட்டு, சமாதானம் பேச முயற்சி செய்தான். அப்போது என் கணவர் இம்ரான் கான் எனது தம்பியை வயிற்றில் ஒரு ஸ்க்ரூட்ரைவர் மூலம் குத்தினார்'.
ஸ்க்ரூட்ரைவரால் குத்தப்பட்ட சமீனபானு தம்பி, ஜூபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பி உயிரிழந்தார். மேலும் தப்பி ஓடிய இம்ரான் கான் மீது வீட்டு வன்முறை மற்றும் தாக்குதல் தொடர்பான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
