'லிவிங் டுகெதர் பார்ட்னரையும், குழந்தையயும் கொன்னு வீட்டுகுள்ள புதைச்ச கொடுரம்...' 'வீட்டுக்குள் கிடைத்த எலும்பு கூடுகள்...' - காரணம் கேட்டு அதிர்ந்த போலீசார்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாமீரட் பகுதியில் ஒரு ஆணுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவில் வாழ்ந்த பெண்ணையும், அவரின் 10 வயது மகளையும் கொலை செய்து வீட்டினுள்ளே புதைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மீரட் நகரத்தில் பார்த்தாபூர் பகுதியில் வசித்து வரும் ஷம்ஷாத் என்னும் நபர் சமூகவலைத்தளம் மூலம் திருமணம் ஆகி கணவரை பிரிந்த பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார். மேலும் இவர்களின் நட்பு காதலாக மாறி இருவரும் மன ஒப்புதலோடு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் கடந்த 4 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இந்த பெண்ணிற்கு 10 வயது மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூலை 14 ம் தேதி அந்த பெண்ணின் நண்பர் ஒருவர், தன் பெண் நண்பரும் அவரின் மகளையும் 3 மாதங்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், அவர்களை காணவில்லை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
வழக்கை விசாரிக்க தொடங்கும் போதுதான் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஷம்ஷாத் என்பவர், அவரது மத அடையாளத்தை மறைத்து அப்பெண்ணை திருமணம் செய்ததாகவும், கடந்த ஒரு வருடமாக, ஷம்ஷாத் மதம் மாறும்படி அப்பெண்ணிற்கு அழுத்தம் தந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்பெண் அதற்கு உடன்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த, ஷம்ஷாத் அந்த பெண்ணையும் அவரது 10 வயது குழந்தையையும் கொலை செய்து, தன் வீட்டின் முற்றத்திலே புதைத்துள்ளார். மேலும் அந்த வீட்டிலேயே கடந்த 3 மாதங்களுக்கு மேலாகவும் வசித்துவத்துள்ளார். இதை அறிந்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த புதன்கிழமை (23.072020) அன்று இரு உடல்களின் எலும்புகூடுகளை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பியுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஷம்ஷாத் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் மீரட் நகரத்தின் எஸ்.பி அகிலேஷ் நரேன் சிங், ஷம்ஷாத்தின் சொந்த மாநிலமான பீகார் நகருக்கு போலீஸ் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது மகளின் எலும்புக்கூடுகள் டி.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

மற்ற செய்திகள்
