'விலைபேசி விற்கப்பட்ட சிறுமிக்கு கொரோனா...' 'இப்ப தான் அபார்ஷன் பண்ணிருக்காங்க...' நடந்தது என்ன...? - நடுங்க செய்யும் பகீர் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானில் விற்கப்பட்ட 14 வயது சிறுமி ஒருவர் திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலையிட்டுக்கு பிறகு தன் குடும்பத்தோடு இணைந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு திரிபுரா, யூனோகோட்டி மாவட்டம் ரடச்செரா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ஒரு நபருக்கு விற்கப்பட்டுள்ளார். மேலும் இந்த சிறுமி தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுமி தான் விற்கப்பட்ட நபரிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார். எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்த சிறுமியை அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால் சிறுமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கோவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி, ராஜஸ்தானில் இருக்கும் கைலாஷாஹாரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார் என்று யூனோகோட்டி காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தெரிவித்தார்.
இதனை அறிந்த திரிபுரா உயர்நீதிமன்றம் இந்த விஷயத்தை சுயமாக நடத்துவதாக தெரிவித்து, திரிபுரா அரசு, திரிபுரா குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) ஆகியவற்றிற்கு நோட்டீஸ் வழங்கியது.
இந்நிலையில், திரிபுராவிலிருந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவையின் குழு ஒன்று ராஜஸ்தானுக்கு சென்று அங்கு இருக்கும் சிறுமியை மீட்டுள்ளனர். மேலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்குப் பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தலைவர் திரிபுரா கமிஷன் நிலீமா கோஷ் கூறயுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி 10 வார கர்ப்பிணியாக இருந்து, ஜூலை மாதத்தில் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமிக்கு மன நலம் சார்ந்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி புதன்கிழமை மாலை திரிபுராவுக்கு திரும்பி வந்து பின்னர் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த சம்பவம் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.