WATCH: கேட்ச் புடிக்கறதுக்கு முன்னாடியே ‘தல’ அத பண்ணிட்டாரு.. அத யாரும் கவனிச்சீங்களா..! ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 07, 2020 11:10 PM

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தோனி டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

IPL2020: MS Dhoni stunning catch in the final over against KKR

ஐபிஎல் தொடரின் 21-வது லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் திருப்பாதி 51 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனை அடுத்து சுனில் நரேன் மற்றும் பேட் கம்மின்ஸ் 9 பந்துகளில் 17 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இப்போட்டியின் கடைசி ஓவரை ப்ராவோ வீசினார். டெத் ஓவர் என்பதால் கேட்ச்கள் வருமென விக்கெட் கீப்பரான தோனி தனது ஒரு கை க்ளோசை கழற்றி வைத்திருந்தார். இந்த நிலையில் அந்த ஓவரின் 5-வது பந்தை எதிர்கொண்ட சிவம் மவியின் பேட்டில் பந்து பட்டு பின்னே சென்றது. அதனை விக்கெட் கீப்பரான தோனி டைவ் அடித்து பிடித்து அசத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. IPL2020: MS Dhoni stunning catch in the final over against KKR | Sports News.