2ஜி அலைக்கற்றை வழக்கு விவகாரம் தொடர்பான புதிய உத்தரவு!.. ‘டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி!’
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் தினமும் 2ஜி வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 17 பேரையும் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு விடுவித்தது. பின்னர் இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அத்துடன் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரிஜேஷ் சேத்தி ஆகியோர் வரும் நவம்பர் மாதம் ஓய்வு பெற இருப்பதால், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம்,அக்டோபர் 5-ஆம் தேதியான இன்று முதல் 2 ஜி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை அவசர வழக்காக, விசாரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளது.