உங்க டீம் செலக்சனுக்கு அவங்க எவ்ளோ பரவால்ல... கேப்டனை 'வறுக்கும்' ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. போட்டி தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பவுலிங் தேர்வு செய்ய பெங்களூர் அணி பேட்டிங் செய்து வருகிறது.

பெங்களூர் அணிக்கு ஓபனிங் பேட்ஸ்மேன்களாக தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கி உள்ளனர். பிஞ்ச் அடக்கி வாசிக்க, படிக்கல் ஆக்ரோஷமாக அடித்து ஆடி வருகிறார். பவுலிங் அணி என புகழப்படும் ஹைதராபாத் பந்துவீச்சை படிக்கல் பதம் பார்த்து வருகிறார்.
The middle-order of #SRH looks a bit weak. #SRHvRCB
— Aditya Saha (@adityakumar480) September 21, 2020
இந்த நிலையில் ஹைதராபாத் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் பலவீனமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மிகவும் நிதானமாக விளையாடக்கூடிய கனே வில்லியம்சன் அணியில் இல்லை. இதனால் மிடில் ஆர்டர் மிகவும் வீக்காக இருப்பதாக வார்னரை ரசிகர்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்து உள்ளனர்.
பெங்களூர் அணி விவரம்
1. ஆரோன் பிஞ்ச் 2. தேவ்தத் படிக்கல் 3. விராட் கோலி 4. ஏபி டிவில்லியர்ஸ் 5. ஜே பிலிப்பி 6. வாஷிங்டன் சுந்தர் 7. சிவம் துபே 8. நவ்தீப் சைனி 9. உமேஷ் யாதவ் 10. டேல் ஸ்டெயின் 11. சாஹல்
ஹைதராபாத் அணி விவரம்
1. டேவிட் வார்னர் 2. ஜே பேர்ஸ்டோ 3. மனிஷ் பாண்டே 4. பி கார்க் 5. விஜய் சங்கர் 6. ஏ சர்மா 7. எம் மார்ஷ் 8. ரஷீத் கான் 9. புவனேஷ் குமார் 10. எஸ் சர்மா 11. டி. நடராஜன்

மற்ற செய்திகள்
