"வெப் 'சீரியஸ்'ல நடிக்க சான்ஸ் வேணுமா??".... இளம்பெண்ணுக்கு வந்த 'மெசேஜ்',,.. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் போலீஸ் நிலையத்தில் அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், 'சில தினங்களுக்கு முன் ராஷி கோயல் (Rashi Goel) என்ற பெண் ஒருவரின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து எனக்கு வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க வாய்ப்பு தருவதாக தெரிவித்தார். அதற்காக, எனது சாதாரண புகைப்படங்கள் மற்றும் அரை நிர்வாண புகைப்படங்கள் அனுப்ப வேண்டும் என தெரிவித்தார். இதனை நம்பி நானும் புகைப்படங்களை அனுப்பினேன். ஆனால் தொடர்ந்து, நிர்வாண புகைப்படங்களை கேட்டு அடிக்கடி அந்த பெண் தொந்தரவு செய்தார். அப்போது அந்த எண்ணை பிளாக் செய்து விட்டேன்.
தொடர்ந்து, சில தினங்களுக்கு பிறகு என்னை தொடர்பு கொண்ட இரண்டு பேர், தங்கள் சொல்வது போல் செய்யவில்லை என்றால் எனது புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்கள்' என அவரது புகாரில் தெரிவிக்கபட்டுள்ளது.
இது தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், ராஷி கோயல் என்ற பெண்ணின் பெயரில் போலி கணக்கு வைத்திருந்தது ஒரு ஆண் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. மம் சந்த் (Mam Chand) என்ற அந்த நபர், பெண்களுடைய பெயரில் 4 போலி கணக்குகளை வைத்துக் கொண்டு, பல பெண்களை இது போன்று நடிக்க வாய்ப்பு தருவதாக ஏமாற்றி மிரட்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
சந்தின் மொபைல் போனில், பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 4 சிம் கார்டுகள், 3 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, சந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
