'இதுக்குனே தனியா ஒரு கால் சென்டர்'... 'இவங்களா 6 கோடிய அடிச்சிருக்காங்க?'... 'பையன் வயசைக் கேட்டு ஆடிப்போன போலீசார்'... 'வெளியான பகீர் பின்னணி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்சூரன்ஸ் நிறுவன ஏஜெண்ட் என ஏமாற்றி 86 வயது முதியவரிடம் இருந்து ரூ 6 கோடி மோசடி செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் 17 வயது சிறுவனும், அவருடைய நண்பர்கள் சிலரும் சேர்ந்துகொண்டு இன்சூரன்ஸ் நிறுவனம் என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடிக்கென ஒரு கால்சென்டரையே நடத்தியுள்ள அந்த கும்பல் 86 வயது முதியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி, அவருடைய வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்கள் வேண்டுமென கேட்டுள்ளனர்.
இதையடுத்து முதியவரிடம் போன் மூலம் சேகரித்த வங்கித் தகவல்களை வைத்து அந்த கும்பல் அதிலுள்ள பணத்தை தங்ளுடைய வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். அந்த வங்கிக் கணக்குகளும் போலியான ஆவணங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதற்காக அவர்கள் 35-க்கும் அதிகமான வங்கிக்கணக்குகளை உருவாக்கியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த முதியவரிடம் மோசடி செய்த ரூ 6 கோடி பணத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து ஏடிஎம் மூலம் எடுத்துள்ளனர். இதை அதிர்ச்சி தரும் மிகப்பெரிய ஒரு மோசடி எனக் கூறியுள்ள போலீசார் அவர்களை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
