'அவரு எப்போதான் ரீ-என்ட்ரீ குடுப்பாரு?'... 'முக்கிய வீரர் குறித்து வெளியான அப்டேட்'... 'கன்ஃபார்ம் செய்த கேப்டன்!!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயமடைந்த அஸ்வின் எப்போது மீண்டும் விளையாடுவார் என்பது குறித்து டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பதிலளித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் ஏழாவது போட்டியான நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இரண்டு மாற்றத்துடன் களமிறங்கியது. கடந்த போட்டியில் காயமடைந்த ரவிச்சந்திர அஸ்வினுக்கு பதிலாக அமித் மிஸ்ராவும், மோஹித் சர்மாவுக்கு பதிலாக ஆவேஸ் கானும் நேற்றைய போட்டிக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸின் போது அஸ்வின் குறித்து பேசியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், "அஸ்வின் முழு உடற்தகுதியுடன் உள்ளார். ஆனால் அவருக்கு அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
