'சக ஊழியருடன் ஏற்பட்ட சண்டையால்'... 'மதுபோதையில் காருக்குள் வைத்து'... 'ஆண் செய்த பகீர் காரியம்'... 'மிரளவைக்கும் சம்பவம்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் அலுவலக ஊழியர் ஒருவர் சக ஊழியரின் விரலை கடித்து துப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

டெல்லி காசியாபாத் பகுதியை சேர்ந்தவர் மோஹித் குமார். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர் தன்னுடைய சக ஊழியர் ஹேமந்த் சித்தார்த் என்பவருடன் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியன்று மதுக்கடையில் மது அருந்தியுள்ளார். பின்னர் இருவரும் அலுவலகம் தொடர்பான பணிகளை முடிப்பதற்காக ஹேமந்த்தின் காரில் கரோல் பாக் என்ற பகுதிக்கு சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பணி தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைத்தகராறாக மாற, கடும் ஆத்திரத்தில் இருந்த ஹேமந்த் மோஹித்தின் விரலை கடித்து துப்பியுள்ளார். பின்னர் காரை விட்டும் அவரை வெளியே தள்ளிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வலியில் துடித்த மோஹித் மீட்கப்பட்டு, அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விரல் பொருத்தப்பட்டதையடுத்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
