'கலவர' கும்பல் கிட்ட இருந்து தப்பிக்க... '3' மணி நேரமா சின்ன 'பாத்ரூம்'ல... ஒளிஞ்சிருந்த 'அஞ்சு' பேரு... குடும்பத்தை கலங்கடித்த 'சோகம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியில் சில தினங்களுக்கு முன் பைரசந்திரா என்னும் பகுதியில் கலவரம் வெடித்தது.
ஒருவரின் ஃபேஸ்புக் பதிவின் காரணமாக இந்த வன்முறை நிகழ்ந்துள்ள நிலையில், மத ரீதியிலான அந்த சர்ச்சை பதிவால் கிழக்கு பெங்களூரின் பல பகுதிகள் சூறையாடப்பட்டன. பல வாகனங்கள் தீ வைக்கப்பட்டது. இந்நிலையில், நாகம்மா லே அவுட் பகுதியின் 7 வைத்து க்ராஸ் தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் ராபின் என்பவர் வசித்து வருகிறார்.
இவர்களின் வீட்டின் மாடியில் தான் சர்ச்சைக்குரிய பதிவிட்ட நபர் வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று, முகநூல் பதிவிட்ட நபரின் வீட்டை தாக்க நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் வருவதை ராபினின் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். அந்த கும்பல் வேக வேகமாக மாடி ஏறி வருவதைக் கண்ட ராபின் மற்றும் குடும்பத்தினர், வேக வேகமாக தங்களது வீட்டிலுள்ள சிறிய கழிவறையில் ஒளிந்து கொண்டது. ராபின், அவரது மனைவி மற்றும் தாயார், குழந்தைகள் உட்பட ஐந்து பேர் அந்த சிறிய பாத்ரூமில் ஒளிந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் அவர்கள் அங்கேயே ஒளிந்திருந்து தப்பித்துள்ளனர்.
அந்த கும்பல் ராபினின் மனைவியின் ஸ்கூட்டி மற்றும் அவரது உறவினரின் கார் ஒன்றையும் தீ வைத்துள்ளது. அதிக நேரம் பாத்ரூமில் இருந்ததால் ராபினின் மகனுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், ராபின் குடும்பத்தினரின் வாகனங்களை கலவர கும்பல் தீ வைத்த போது, ராபினின் மாமியார் வாகனத்தை தீ வைக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஆனால் அந்த கலவர கும்பல், பேசிக் கொண்டிருந்தால் உன்னையும் சேர்த்து தீ வைத்து விடுவேன் என மிரட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.