“நியாயமாரே!”.. “பொழப்பே இத நம்பிதானே!”.. ‘ஜாயினிங் லெட்டருடன்’ காத்திருந்த ஐ.டி ஊழியர்களுக்கு வந்த ஷாக் மெயில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசம்பளம் அதிகமாக கிடைக்கும் என நேர்முகத் தேர்வுகள் நிறைய நடத்தி வேலைக்கு எடுத்த ஊழியர்களுக்கு வழங்கிய அப்பாய்மெண்ட் ஆர்டர்களை, தற்போது சில ஐ.டி நிறுவனங்கள் ரத்து செய்ததால், அப்பாவி இளைஞர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்து நிற்கதியாக நிற்கின்றனர்.
![chennai, bangalore IT firm mail for those waiting with joining letter chennai, bangalore IT firm mail for those waiting with joining letter](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/chennai-bangalore-it-firm-mail-for-those-waiting-with-joining-letter.jpg)
நல்ல படிப்பு, நல்ல சம்பளம் என்றாலே ஐ.டி துறைதான் நினைவுக்கு வரும் என்கிற வகையில் பலரும் ஐ.டி படித்துவிட்டு பல கனவுகளுடன் பெங்களூர் மற்றும் சென்னை OMR, தரமணி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, கிண்டி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் ஐ.டி பூங்காக்களை சுற்றி வருவதுண்டு.
அந்த அளவுக்கு சம்பளம், வேலை முதலானவற்றின் மூலம் முன்னேற்றத்தை எளிமையாக்குகிற இந்த நிறுவனங்களோ இந்த கொரோனா சூழலில், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு, வேலை நேரக் குறைப்பு, வீட்டில் இருந்து பணிபுரியச் சொல்லி அலுவலக செலவுகளை குறைத்தல் உள்ளிட்ட முறைகளை கையில் எடுத்துள்ளன.
இன்னொருபுறம் கூடுதலான சம்பளம் உள்ளிட்டவற்றை காட்டி, ஊரடங்குக்கு முன் தேர்வு செய்யப்பட்ட அனுபவம் மிக்க ஊழியர்களுக்கு பணி ஆணைகளை நிறுவனங்கள் வழங்கின. இந்த நிலையில் அந்த ஆணைக்கான தேதிகளை இந்த நிறுவனங்கள் சில மாதங்கள் நீட்டித்துள்ளன.
அதுமட்டுமல்லாமல், “எந்த காரணம் கொண்டும் ரத்து செய்ய மாட்டோம், ஊரடங்கு முடிந்த பின்னர், தேர்வு செய்த நபர்களை பணிக்கு அமர்த்துவோம்,” என்றும் தெரிவித்துள்ளன. ஆனால் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கே இப்போது நிலைமை சரியில்லை எனும்போது, இப்படி வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்களின் கதி என்ன என்பதும், மீண்டும் அழைப்பார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்பதும் பலரின் கேள்வியாக உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)