'உங்க ஐடி வேலைய இழக்காம இருக்கணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணுங்க...' - இன்ஃபோசிஸ் தலைமை அதிகாரி அளிக்கும் தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் தனிநபர்கள் தங்களின் திறனை வளர்க்க ஒவ்வொரு நாளும் பாடுபட வேண்டும் என ஆன்லைன் பட்டமளிப்பு விழாவில் இன்போசிஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கூறியுள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் லிமிடெட் தலைமை இயக்க அதிகாரி யு.பி பிரவீன் ராவ் இன்று ஆன்லைன் பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களிடம் உரையாடினார்.
சுமார் 2,800 மாணவர்கள் பங்கேற்ற ஆன்லைன் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட ராவ், இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஸ்டியூட்' உடன் இணைந்து உயர்மட்ட தகவல் தொழில்நுட்ப ஊழியராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் அவர் முக்கியமாக குறிப்பிட்டதாவது, 'இன்றைய காலகட்டத்தில் ஐ.டி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி சார்பையும், தொழில் நுட்பங்களையும் மாற்றிக்கொண்டு வருகிறது. தொழில்நுட்ப துறை தற்போது மறு உருவாக்கம் பெற்று வருகிறது. இப்போது நாம் படிக்கும் இந்த 2 அல்லது 3 வருடங்கள் படிப்பு மட்டும் போதாது. நாம் நம்முடைய திறன்களை வளர்க்க புதிய விஷயங்களை தினமும் கற்க வேண்டும்.
இது உங்களுக்கு மட்டுமில்லாது, தற்போது பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும், எனவே வாழ்நாள் முழுவதும் கற்றலில் ஈடுபட வேண்டும். இந்த செயல் வேலைவாய்ப்பை உருவாக்கி கொள்ளவும், மேலும் அந்த வேலையை தக்க வைத்து, இழக்காமல் இருக்க உதவிகரமாக இருக்கும்' என்று ராவ் கூறியுள்ளார்.