'நிறைய தடவ வார்னிங் கொடுத்தாச்சு...' 'இனி பொறுத்திட்டு சும்மாலாம் விட முடியாது...' 'வருத்தப்பட்ட மனைவி...' - கணவர் துணிந்து இறங்கி செய்த கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Aug 09, 2020 05:02 PM

பெங்களூர் பசவனகுடி சுப்பண்ணா செட்டி பகுதியில் 07-08-2020- அன்று பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

bangalore basavanagudi lorry driver killed wife 2nd husband

சடலத்தை கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நிலையில், இறந்து கிடந்தவர் யார்?. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, என்பது குறித்த விசாரணையை தொடங்கினார்.

இந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணைக்கு பின் கொலையானவர் சித்தராஜா (26) என்பது தெரிய வந்துள்ளது.

இவர் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள கொள்ளேகாலை பகுதியை சேர்ந்தவர் என்பது உறுதி ஆனது. மேலும் பெங்களூருவில் லாரி கிளீனராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது.

இவர் பெங்களூருவைச் சார்ந்த லதா (28) என்ற பெண்மணியை திருமணம் செய்திருந்த நிலையில், சித்தராஜ் தினமும் மது அருந்தி விட்டு தகராறு செய்துள்ளார். இதனால் சித்தராஜின் மீது ஏற்பட்ட விரக்தியால், லதா பிரிந்து சென்றுள்ளார்.

இதன் பின்னர் வியாபாரியான லட்சுமணன் என்பவரை, லதா இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சித்தராஜா தினமும் லதாவிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும், லதாவின் தாயிடம் சென்றும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விஷயத்தினை லதாவின் இரண்டாவது கணவரான லட்சுமணன், சித்தராஜை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால், லதாவிடம் சித்தராஜ் தொடர்ந்து தகராறு செய்து துன்புறுத்தி வந்ததால், ஆத்திரமடைந்த லட்சுமணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து சித்தராஜாவை ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bangalore basavanagudi lorry driver killed wife 2nd husband | India News.