“எஸ்கேப் ஆன 3000 கொரோனா நோயாளிகள்!”.. ‘எப்படி தப்பிச்சாங்க?’.. ‘இதுதான் நடந்தது!’.. ‘உச்சகட்ட டென்ஷனில்’ மாநகராட்சி அதிகாரிகள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூரில் 3000 கொரோனா நோயாளிகள் தப்பிவிட்டதாக, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழுகு அவர் அளித்த தகவலில், “ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரத்து 338 பேரின் பரிசோதனை மாதிரிகள் பரிசோதனைக் கூடத்தில் உள்ளன. எனினும் அந்த நபர்களை கண்டுபிடிக்க முடியாததால், இந்த சிக்கலை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் எல்லாருமே பரிசோதனைக் கூடத்தில் தங்களைப் பற்றிய தவறான தகவல்களை அளித்துவிட்டு தப்பிச் சென்றதால்தான் இந்த பிரச்சனை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நேற்று ஒரே நாளில் பெங்களூரு அர்பன் பகுதியில் 2,036 பேர் உட்பட மொத்தமாக கர்நாடக மாநிலத்தில் 5,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால், கர்நாடகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000த்தை நெருங்கி வருகிறது.