'இரவு விழித்திருந்து வேலை செய்வதில் இத்தனை நன்மைகளா!... 'ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்'...

முகப்பு > செய்திகள் > லைப்ஸ்டைல்

By Saranya | Aug 13, 2020 12:16 PM

இரவு நேரம் விழித்திருந்து வேலை செய்வதிலும் சில நன்மைகள் உள்ளதென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

Work At Night 9 Hidden Benefits Of Being A Night Owl

Work At Night Hidden Benefits Of Being A Night Owl

கேத்தலிக் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இரவு கண் விழிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு கற்பனைத் திறன் அதிகம் இருக்கும் எனவும், தேர்விலும் அதிகாலை எழும் மாணவர்களைக் காட்டிலும் இவர்கள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு பல்கலைக்கழகத்தின் ஆய்வில், அதிகாலை எழுபவர்கள் கூட சீக்கிரமாக சோர்வடைந்துவிடும்போதும், இவர்கள் அவ்வளவு எளிதில் சோர்வடைய மாட்டார்கள், எப்போதும் அலர்ட்டாகவே இருப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Work At Night 9 Hidden Benefits Of Being A Night Owl

மேலும் இரவு கண் விழிக்கும் பழக்கம் கொண்டவர்கள் அறிவு சார்ந்த விஷயத்தில் மிகவும் ஸ்மார்ட்டானவர்களாக இருப்பார்கள் என லண்டனில் உள்ள பள்ளி நடத்திய ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. காலை சீக்கிரம் எழுபவர்களைக் காட்டிலும் இவர்கள் தாமதமாக தூங்கினாலும் மாலை வரை திடமான ஆற்றல் குறையாதவர்களாக இருப்பார்கள் என ஆல்பெர்டா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Work At Night 9 Hidden Benefits Of Being A Night Owl

அத்துடன் இவர்களுக்கு பல வகையான திறன்கள் இருக்கும் எனவும், இவர்கள் வாழ்க்கையில் குறிக்கோளை எட்டக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவும் மேட்ரிட் பல்கலைக்கழகத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல உலக அளவில் இரவு கண்விழித்து தங்கள் வேலையை செய்பவர்கள் எண்ணிக்கைதான் அதிகம் என ஜெர்மனி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் தங்களுக்கு விருப்பமான விஷயங்கள், பொழுதுபோக்கு நடவடிக்கைகள் என அனைத்தையும் இரவில்தான் செய்வதால் அவர்கள் மன மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Work At Night Hidden Benefits Of Being A Night Owl | Lifestyle News.