'ஆந்திரா'வில் பரவிய மர்ம 'நோய்',.. பாதிக்கப்பட்டவங்க 'உடல்'ல இருந்து..." வெளியான அதிர்ச்சி 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்னும் நகரில் சில தினங்களுக்கு முன் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் வரை அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

திடீரென ஒரே பகுதியிலுள்ள இத்தனை பேர் மயங்கி விழுந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது.
அது மட்டுமில்லாமல், இப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வித்தியாசமான குரல்களை எழுப்புவதாகவும் தகவல் தெரிவித்தது. ஒருவித மர்ம நோயாக இது அறியப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நிக்கல், காரீயம் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் கலந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலக சுகதார அமைப்பு மற்றும் டெல்லி, புனே எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் நடத்திய மருத்துவ சோதனையில் தெரிய வந்துள்ளது. இத்தகைய நச்சுப் பொருள்கள் ஒருவரது உடலில் எப்படி கலந்துள்ளது என்பது குறித்து தீவிரமான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
