'மாநில' முதல்வருக்கு கோவில் கட்டும் 'எம்.எல்.ஏ'!!... 'பூமி' பூஜையுடன் அதிரடியாக ஆரம்பமாகும் 'பணிகள்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் கோபுலாபுரம் தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ தலாரி வெங்கட்ராவ், கோபாலபுரம் ராஜம்பாளையத்தில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில் கட்ட முடிவு செய்துள்ளார்.

இதற்காக அவர் நேற்று அடிக்கல் நாட்டி பூமி பூஜை நடத்தியுள்ளார். இதுகுறித்து வெங்கட்ராவ் கூறுகையில், 'முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் நலத்திட்டங்களை வருங்கால தலைமுறையினரும் நினைவு கூறும் விதமாக அவரை ஒரு கடவுளாக கருதி இந்த கோவில் கருதப்படுகிறது. மாநில மக்களுக்கு கேட்காமலேயே பல உதவிகளை ஜெகன்மோகன் ரெட்டி செய்து வருகிறார். ஒய்.எஸ். குடும்பத்தினர் மக்களுக்கு சேவை செய்வதற்காக பிறந்துள்ளனர். எந்தவொரு தீய சக்திகளும் ஜெகன்மோகன் ரெட்டியை நெருங்காமல் தடுக்கும் நோக்குடன் இந்த கோவில் காட்டுகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நமது நாட்டில் பல நடிகர் நடிகைகளுக்கு கோவில் கட்டும் நிலையில் மாநில முதல்வருக்கு கோவில் கட்டும் பணியை எம்.எல்.ஏ மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
