குறுக்கே வந்த 'மாடு',,.. SUDDEN 'பிரேக்' போட்டு நிறுத்திய 'டிரைவர்',,.. விபத்தில் சிக்கிய 'முன்னாள்' முதல்வரின் 'கார்',, பரபரப்பு 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநில முன்னாள் முதல்வரான சந்திரபாபு நாயுடு விஜயவாடா - ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரது காரின் முன்னரும், பின்னரும் தேசிய பாதுகாப்பு படையினரின் கார்களும் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திடீரென பசு மாடு ஒன்று குறுக்கே வந்த நிலையில், முன்னால் சென்று கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் கார், அதன் மீது மோதாமல் இருக்க வேண்டி, பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னால் சென்ற கார் பிரேக் போட்ட காரணத்தினால் பின்னால் வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதாகவும், இதில் நான்காவதாக வந்த சந்திரபாபு நாயுடு கார் மோதியதாகவும் தெரிகிறது. இந்த விபத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும், வேறு ஏதும் பாதிப்பு இல்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்
