VIDEO : "இப்டி 'நடக்கும்'னு அவங்க கனவுல கூட நெனச்சுருக்கமாட்டாங்க",.. 'கண்' இமைக்கும் நேரத்தில் 'தந்தை' - மகனுக்கு நேர்ந்த 'கொடூரம்'..,, பதைபதைக்க வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலம், விஜயவாடா பகுதியை அடுத்து அமைந்துள்ள தொழிற்சாலை எஸ்டேட் ஒன்றில் கோட்டீஸ்வர ராவ் மற்றும் அவரது மகன் சின்னா ராவ் ஆகியோர் காலி கெமிக்கல் கேன்கள் ஆகியவற்றை சேகரித்து கொண்டிருந்த போது, திடீரென வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த வெடி விபத்தில் தந்தை, மகன் ஆகிய இரண்டு பேரும் சில தூரங்களுக்கு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதில், ஒருவரது உடல் கூரை ஒன்றின் மேல் கிடந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருவரும் வழக்கம் போல அங்கிருந்த காலி கேன்களை சேகரித்து கொண்டிருந்த நிலையில், கேன் ஒன்றை இருவரும் தட்டியுள்ளனர். அந்த சமயத்தில் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அப்பகுதிக்கு அருகே பணிபுரிபவர்கள் தெரிவிக்கையில், 'அவர்கள் இரண்டு பேரும் காலி கெமிக்கல் கேன்களை தான் அள்ளிச் சென்றனர். கெமிக்கல் நிரம்பிய கேன்கள் உள்ளே தான் இருந்தது' என்றனர். அவர்கள் சேகரித்த காலி கேன்களில் ஏதேனும் சிறிய அளவில் கெமிக்கல்கள் ஏதேனும் இருந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், காரணம் என்னவென்று தெரிந்த பின்னரே விசாரணை மேற்கொள்ள முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே போல, அந்த தொழிற்சாலையின் உரிமையாளர்கள் செய்த ஏதேனும் தவறால் இந்த உயிர்பலி நிகழ்ந்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
