‘இப்படியே போனா... சிறையிலயே முடிஞ்சிருவேன் போலிருக்கு!’.. பெலாரஸ் சிறையில் புலம்பித் தள்ளும் சுவிஸ் பெண்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Dec 08, 2020 01:33 PM

பெலாரஸ் நாட்டில் கைது செய்யப்பட்ட சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண்மணி தனது வாழ்க்கையின் கடைசி நாட்கள் சிறைக்குள்ளேயே முடிந்துவிடும் என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

will remain life time in jail,Swiss woman fear who Jailed for protest

சுவிஸ் மற்றும் பெலாரஸ் இரட்டைக்குடியுரிமை வைத்திருந்ததற்காக Natalie Hersche என்கிற 51 வயது பெண் தான் இப்போது சிறைவாசத்தில் இருக்கிறார். இந்த பெண்மணி மீதான குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுவார் அல்லது நீண்ட பல ஆண்டுகள் வரை அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. பெலாரஸ் நகர் தலைநகர் Minskல் முன்னெடுக்கப்பட்ட பெண்கள் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட சுவிட்சர்லாந்தின் St.Gallen மண்டலத்தில் குடியிருக்கும் Natalie Hersche கைது செய்யப்பட்டார்.

காவல்துறையை தனது கடமையை செய்ய விடாமல் தடுத்தது, மகளிர் போலீசாரை தாக்கி காயம் ஏற்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் Natalie Hersche கைது செய்யப்பட்டார். இதனையடுத்து டிசம்பர் 3 ஆம் தேதி இது தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டது.

இதனிடையே பெலாரஸ் நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் இது பற்றி அறிக்கை சமர்ப்பிக்க இருக்கும் சூழலில், இவ்வழக்கை தள்ளுபடி செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒருபுறமும், இதற்கு மறுப்பதுடன் Natalie Hersche தண்டனை அனுபவிக்க வேண்டியவர் என்று அரசு தரப்பு வாதிட்டு வருவதும் நிகழ்கிறது.  அத்துடன் குறைந்தது 2 ஆண்டுகளும் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சுவிஸ் அரசாங்கம் சார்பிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Will remain life time in jail,Swiss woman fear who Jailed for protest | World News.