"அச்சச்சோ,,.. ஸ்கூல் தொறந்த 3 நாளுலேயே இப்டியா??..." அதிர்ச்சியில் உறைந்த 'மாநிலம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், இந்தியாவில் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, கொரோனா தொற்று குறைவான மாநிலங்களில் மாநில அரசின் விருப்பத்திற்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு 3 நாட்களுக்குள் சுமார் 150 மாணவர்கள் மற்றும் 10 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் தான் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, அங்குள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சித்தூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் உட்பட சில மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க ஆலோசித்து வரும் நிலையில், ஆந்திராவில் நிகழ்ந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.