'விபத்தில் சிக்கிய கார்'... 'பரிதாபப்பட்டு உதவ ஓடிய காவல்துறை அதிகாரி'... எதேச்சையாக டிக்கியை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Oct 15, 2020 07:28 PM

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கேசப்பள்ளி என்ற பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று விபத்து ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த டிவைடரில் மோதிய விபத்துக்குள்ளானது. உடனே விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் போலீசார் வருவதற்கு முன்னரே விபத்துக்குள்ளான காரில் இருந்தவர்கள் காரை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

140 Kg Marijuana Seized After The Car Carrying It Met With An Accident

இதனிடையே சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், காரில் இருப்பவர்களைக் காப்பாற்றுவதற்காக காரின் உள்ளே சென்று பார்த்தார்கள். ஆனால் காரின் உள்ளே யாரும் இல்லை. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் வாகனத்தைச் சோதனை செய்தார்கள். அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எதேச்சையாகப் பின்பக்க இருக்கையைச் சோதனை செய்தார். அதில் 140 கிலோ அளவிற்குக் கஞ்சா போதைப்பொருள் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

140 Kg Marijuana Seized After The Car Carrying It Met With An Accident

கார் விபத்துக்குள்ளானதால் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்ற அச்சத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் காரை அப்படியே விட்டு விட்டுத் தப்பிச்சென்றிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, விபத்துக்குள்ளான காரையும், அதிலிருந்த 140 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கடத்தல் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 140 Kg Marijuana Seized After The Car Carrying It Met With An Accident | India News.