"3 வருஷமா 'லவ்' பண்ணிட்டு,,.. இப்போ 'கல்யாணம்' பண்ணிக்க வேற 'பொண்ணு' கேக்குதோ"??... ஆத்திரத்தில் 'காதலி'யின் செயலால் 'பரபரப்பு'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டத்தை அடுத்த பெத்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர் சுப்ரியா என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களின் காதலுக்கு நாகேந்திராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த மாதம் நாகேந்திராவுக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தகவலை அறிந்து ஆத்திரமடைந்த சுப்ரியா, நாகேந்திரா பைக்கில் சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஆசிட் ஊற்றியுள்ளார்.
இதில், நாகேந்திராவின் முகம் மற்றும் உடலின் சில பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து நாகேந்திரா கூறுகையில், தாங்கள் பரஸ்பரம் பிரிந்ததற்காக சுப்ரியா தன்னிடம் இருந்து பணம் வாங்கினார் என்றும், இருந்த போதும் தற்போது இரண்டாவது முறையாக தன் மீது ஆசிட் ஊற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மற்ற செய்திகள்
