‘அணித்தேர்வுக்கு முன்னதாக’.. விராட் கோலி பகிர்ந்த ‘ஸ்பெஷல் ஃபோட்டோ’.. ‘மகிழ்ச்சியில் தோனி ரசிகர்கள்’..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Nov 20, 2019 05:11 PM
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தோனி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று தோனி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களுடன் மழையில் நனைந்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில் கோலிக்கு முன்பாக திரும்பியபடி நிற்கிறார் தோனி. இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள கோலி அதில், “பார்ட்னர் இன் க்ரைம். க்ரைம் : பவுண்டரி லைன் அருகில் நிற்கும் ஃபீல்டர்களிடமிருந்து 2 ரன்களைத் திருடுபவர். யார் இவர் எனக் கண்டுபிடியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கோலியின் பதிவிற்குக் கீழ், தோனி நாளை அணித்தேர்வில் தேர்வு செய்யப்படலாம் என அவருடைய ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர். உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்துவரும் தோனி கடந்த வாரம் ராஞ்சியில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
Partners in crime🤝.. Crime : stealing doubles from fielders at the boundary 😃. Guess who 🤔 pic.twitter.com/Gk1x6lBIvm
— Virat Kohli (@imVkohli) November 20, 2019
