"கல்யாணம் பண்ணிக்குறியா இல்லியா??.." நைசாக நழுவ பார்த்த காதலன்.. கட்டையுடன் களத்தில் இறங்கிய காதலி
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திரா : காதலித்து ஏமாற்ற பார்த்த காதலனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க, கோபத்தில் கட்டையுடன் களமிறங்கிய காதலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்திலுள்ள சின்னத்தெக்கூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் லாவண்யா. அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரை, லாவண்யா காதலித்து வந்துள்ளார்.
இருவரது காதலும் நல்லபடி சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென லாவண்யாவுடன் பேசுவதை, ஸ்ரீனிவாசன் தவிர்த்து வந்துள்ளார்.
காதலன் மீது சந்தேகம்
இதன் பெயரில், தன்னுடைய காதலன் ஸ்ரீனிவாசன் மீது லாவண்யாவுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. காதலனின் நடத்தையிலும் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கவே, லாவண்யாவின் சந்தேகமும் வலுத்துள்ளது. மேலும், காதலியை திருமணம் செய்து கொள்ளவும் ஸ்ரீனிவாசன் மறுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
காதலி எடுத்த முடிவு
காதல் என்ற பெயரில், தன்னை ஏமாற்றுவதை தெரிந்து கொண்ட லாவண்யா, காதலனுக்கு தக்க பாடம் புகட்ட முடிவு செய்துள்ளார். அதன் பெயரில், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தனது காதலன் செயல் குறித்து தெரிவித்த லாவண்யா, தனது கிராமத்திலுள்ள கோவில் ஒன்றிற்கு அருகே காதலனை வர வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
கட்டையுடன் இறங்கிய லாவண்யா
தொடர்ந்து, அங்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு, காதலன் ஸ்ரீனிவாசனையும் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் மறுக்கவே, லாவண்யா மனமுடைந்து போயுள்ளார். பின்னர், ஆத்திரத்துடன் இருந்த லாவண்யா, அங்கு கிடந்த பெரிய கட்டை ஒன்றை எடுத்து, காதலனை துரத்தி துரத்தி அடிக்க ஆரம்பித்துள்ளார்.
வீடியோ வைரல்
இது தொடர்பான வீடியோக்கள், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும், தன்னுடைய காதலனை லாவண்யா கட்டையால் தாக்கிய நிலையில், அங்கிருந்த குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் ஒன்றாக கூடி, காதலியை திருமண செய்து கொள்ளவும் ஸ்ரீனிவாசனிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
