பணத்த பார்த்து நான் லவ் பண்ணல.. எனக்கு ஏன் அவர பிடிக்கும்னா.. 50 வயது எலான் மஸ்க்-ஐ காதலிக்கும் 27 வயது நடிகை

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 22, 2022 12:33 PM

பரபரப்பு செய்திகளுக்கு பெயர் போன எலான் மஸ்க்க்கும் ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பஸட்டும் காதல் செய்து வருகிறார்கள் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

Elon Musk is in love with Australian actress Natasha Bassett

இன்ஜினியரிங் படிச்சிட்டு.. சுயேட்சையாக களம் இறங்கி வெற்றி பெற்ற 22 வயது இளம் வேட்பாளர்

வயது வித்தியாசம் ஒரு பொருட்டு அல்ல:

50 வயதாகும் எலான் மஸ்க் 27 வயது நடாஷாவை காதலிப்பது குறித்தான செய்திகள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் நாம் வயதை கண்டு வாயை பிளந்தாலும் வெளிநாடுகளில் இப்படி வயது வித்தியாசம் பார்க்காமல் காதலிப்பது சாதாரண விஷயம் ஆகும்.

பணத்திற்காக காதலிக்கவில்லை:

சுமார், 233 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து வைத்திருக்கும் எலான் மஸ்க்கை அவரின் பணத்திற்காக காதலிக்கவில்லை எனவும், அவரின் மூளைக்காக மட்டுமே காதலிப்பதாக நடாஷா தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் எலான் மஸ்க்கிற்கும் அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த 33 வயதான பாடகி கிளெய்ர் பவுச்சருடன் குழந்தை பிறந்து 'X AE A-Xii' என பெயரிட்டனர்.

Elon Musk is in love with Australian actress Natasha Bassett

இருவரும் 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிந்துவிட்டதாக செய்தி எழுந்த நிலையில், தான் இன்னும் மஸ்குடன் தான் வாழ்வதாக அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார் கிளெய்ர்.

தற்போது பாடகர் எல்விஸ் பிரெஸ்லியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரின் முதல் காதலியான டிக்சி லாக்காக நடிக்கிறார் நடாஷா பஸட். அதன் மூலமே நடஷாவிற்கும் எலான் மஸ்க்கிற்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. முதலில் நண்பர்களாக பழகிய அவர்கள் பின்னர் காதலர்கள் ஆகிவிட்டார்களாம்.

எதனைக் கண்டு மயங்கினார்?

தன்னுடைய சுண்டு விரல் அழகில் அனைவரையும் கவரும் நடாஷா மஸ்கின் அறிவாளித்தனத்தை பார்த்து மயங்கிவிட்டார் என அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் எலான் மஸ்க் முதன் முதலில் எழுத்தாளர் ஜஸ்டின் திருமணம் செய்து 5 மகன்கள் இருக்கிறார்கள். ஐஸ்டினை பிரிந்த எலான் இங்கிலாந்தை சேர்ந்த நடிகை தலுலா ரைலியை இரண்டு முறை திருமணம் செய்து இரண்டு முறை விவாகரத்து செய்தார் மஸ்க் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: விஜய் மக்கள் இயக்கத்திற்கு இரண்டாவது வெற்றி.. குஷியில் விஜய் ரசிகர்கள்..!

Tags : #ELON MUSK #AUSTRALIAN ACTRESS NATASHA BASSETT #LOVE #எலான் மஸ்க் #காதல் #ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பஸட்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Elon Musk is in love with Australian actress Natasha Bassett | World News.