என் புருஷன முடிச்சிடலாம்.. மனைவியின் செல்போனில் சிக்கிய ஆதாரம்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வந்த உண்மை
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல்: பழனி அருகே மர்மமான முறையில் ஒருவர் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

பழனி அருகே ஆர்.ஜி.நகரைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் செல்வராஜ். இவரது மனைவி ஜெகதா. கடந்த ஜனவரி 1ம் தேதி செல்வராஜ் சின்னக்கலையம்புத்தூர் மற்றும் நெய்க்காரப்பட்டி சாலையில் அரிமா சங்க அலுவலகம் அருகில் இறந்து கிடந்தார். இதுதொடர்பாக ஜெகதா பழனி தாலுகா போலீசில் அளித்த புகாரில் தனது கணவர் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச் சென்றதாகவும், வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மர்மமான முறையில் மரணம்
இந்நிலையில் செல்வராஜின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேக வழக்காக வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் கழுத்தை நெறித்ததால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி சத்யராஜ் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.
தகாத உறவு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜெகதாவின் செல்போன் எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதன் மூலம் ஜெகதா கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜெகதாவிற்கும், பைனானஸ் தொழில் செய்து வந்த திண்டுக்கல் மாவட்டம், பித்தளைபட்டியைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மூன்று பேர் கைது
மேலும், செல்வராஜ் குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஜெகதா, அவரது தாய் ஓபுளாபுரத்தைச் சேர்ந்த ராஜம்மாள், கள்ளக்காதலன் ஜெகதீஸ் ஆகியோர் செல்வராஜை கழுத்தை நெறித்து கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பழனி தாலுகா போலீசார் ஜெகதா, ராஜம்மாள் மற்றும் ஜெகதீஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
