திபுதிபுன்னு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து.. லேடி டாக்டரின் அருகே சென்ற இளைஞர்.. அங்கு நடந்த ட்விஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு மருத்துவமனையில் பெண் டாக்டரிடம் காதலை கூறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் காலை வழக்கம் போல் நோயாளிகளை பரிசோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் ஒருவர், டாக்டரில் காதலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும் பெண் டாக்டரிடம் அந்த வாலிபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர் உடனடியாக அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடலூர் வெள்ளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பது தெரியவந்தது. மேலும் இவர் எதற்காக அந்த பெண் டாக்டரிடம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மற்ற செய்திகள்
