VIDEO: வேலை முடிச்சிட்டு வந்த ‘IT’ பெண்ணை காரில் கடத்திய மர்ம நபர்கள்.. சிக்கிய அக்கா கணவர்.. வெளிவந்த திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கும், பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவரது மனைவிக்கு தங்கை ஒருவர் உள்ளார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த சூழலில் மனைவியின் தங்கையை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொள்ள தேவராஜ் விரும்பியுள்ளார். இதுகுறித்து மனைவியின் தங்கையிடம் கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த இளம்பெண் திருமணத்துக்கு மறுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அப்பெண்ணை கடத்தி திருமணம் செய்துகொள்ள தேவராஜ் முடிவு செய்துள்ளார். அதன்படி தனது நண்பர்கள் இருவருடன் அப்பெண் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திற்கு வெளியே காத்திருந்துள்ளனர். அப்பெண் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இதை கவனித்த தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் உடனே அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர்.
வழக்கமாக வேலை முடிந்து வீடு திரும்பும் தனது மகள் நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது அம்மா, உடன் வேலை பார்ப்பவர்களிடம் போன் செய்து விசாரித்துள்ளார். ஆனால், அப்பெண் வேலை முடிந்து சீக்கிரமாகவே சென்று விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அம்மா, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனே போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கார் ஒன்றில் இளம்பெண்ணை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காரின் நம்பரை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே வாகன சோதனை ஈடுபட்டபோது சம்பந்தப்பட்ட காரை போலீசார் பிடித்துள்ளனர்.
அப்போது அக்காவின் கணவர் தேவராஜ்தான் அவரது தங்கையை கடத்தியது என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தேவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
