பிரேக் அப் மூலம் உருவான யூடியூப் சேனல்.. இப்போ காதலியே கொடுத்த 'கிரீன்' சிக்னல்.. மதன் கௌரியின் 'சுவாரஸ்ய' காதல்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 12, 2022 10:17 AM

சென்னை : தன்னுடைய 11 வருட காதல் திருமணத்தில் முடியவில்ல நிலையில், அது பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை மதன் கௌரி தற்போது வெளியிட்டுள்ளார்.

madan gowri announces about his love marriage

யூடியூப்பில் வீடியோக்களை வெளியிட்டு, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர் மதன் கௌரி. மக்களுக்கு அதிகம் தெரிந்திடாத பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை, மிகவும் தெளிவாக விவரித்து வீடியோ வெளியிடுபவர் மதன் கௌரி.

இவரின் ஆரம்ப காலத்தில், இவரது வீடியோக்கள் மீது சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டிருந்தாலும், தொடர்ந்து பல விதமான தகவல்களை தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் மக்களுக்கு அளித்து வருகிறார்.

11 ஆண்டு காதல்

இந்நிலையில், தன்னுடைய திருமணம் குறித்த தகவல் ஒன்றை மதன் கௌரி, தன்னுடைய யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது மட்டுமில்லாமல், தன்னுடைய 11 ஆண்டு கால காதல் பற்றியும், சில சுவாரஸ்யமான தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி பேசும் மதன் கௌரி, 'என் காதலியின் பெயர் நித்யா. மதுரையில் நான் 12 ஆம் வகுப்பு படித்த பள்ளியில் தான், நித்யாவும் படித்தார். ஆனால், பள்ளியில் இருவரும் நேராக பார்த்து பேசியது கூட இல்லை. அந்த சமயத்தில், இந்த பெண் தான் எனது வாழ்க்கையை மாற்றப் போகிறார் என்பது கூட எனக்கு தெரியவில்லை.

மலர்ந்த காதல்

பள்ளிப் படிப்பு முடிந்து, பேஸ்புக் மூலம் தான், நித்யாவிடம் பேச ஆரம்பித்தேன். ஆரம்பத்தில், நட்பாக தான் பேச ஆரம்பித்தோம். அதன் பிறகு தான் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. மதுரை ரெயில் நிலையம் ஒன்றில் வைத்து தான், நேராக முதல் முறையாக நித்யாவை நேரில் சந்தித்து பேசினேன். நாங்கள், வெவ்வேறு கல்லூரிகளில் தான் படித்தோம்.

பிரேக் அப்பில் முடிந்த லவ்

அப்படி இருக்க, நான் மாஸ்டர்ஸ் படித்துக் கொண்டிருந்த போது தான், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் சண்டை உருவானது. அதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் மட்டும் தான். அந்த சண்டை, எங்களை பிரேக் அப் வரைக்கும் கொண்டு சென்றது. ஐந்து வருடங்களாக நீடித்த காதல், பிரிவாக மாறியது கடும் மன உளைச்சலைக் கொடுத்தது.

யூடியூப் சேனல் உருவான கதை

அதன் பிறகு தான், அதில் இருந்து வெளியேற வேண்டி, யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தேன். அதன் மூலமாவது, நித்யா என்னை பார்த்து பேசுவார் என்பதற்காக தான் ஆரம்பித்தேன். என்னுடைய வீடியோவும் மெல்ல மெல்ல ரீச் ஆக ஆரம்பித்தது. அதன் பிறகு தான், முழு நேரமாக யூடியூப்பில் வீடியோ பதிவிட்டு வந்தேன். தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, அவரிடம் மீண்டும் பேச வாய்ப்பு கிடைத்தது.

சம்மதம் சொன்ன பெற்றோர்கள்

நித்யாவை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் கேட்டேன். அவரும் சம்மதித்து விட்டார். நாங்கள் இருவரும் வெவ்வேறு சாதி என்ற போதிலும், எங்களது குடும்பத்தினர், எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. எங்களின் பெற்றோர்களைப் போல, அனைவரும் சாதி, மத பேதத்தை மறந்து, காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என மதன் கௌரி தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல், தங்களின் காதல் தருணத்தில் நிகழ்ந்த சில பொன்னான தருணங்கள் குறித்தும், மதன் கௌரி, சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

நெட்டிசன்கள் வாழ்த்து

பிரேக் அப் மூலம், யூடியூப் சேனல் ஆரம்பித்து, அதன் மூலம் பிரபலம் ஆன மதன் கௌரி, இன்று மீண்டும் தனது காதலியையே கரம் பிடித்து, விரைவில் திருமணமும் செய்து கொள்ளவுள்ளார். இந்த காதல் ஜோடிக்கு, நெட்டிசன்கள் பலரும் மனமார தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags : #MADAN GOWRI #LOVE #MARRIAGE #மதன் கௌரி #காதல் #திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madan gowri announces about his love marriage | Tamil Nadu News.