"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.." தனியாக மாடிக்கு அழைத்த கணவர்.. நம்பி போனதுக்கு இப்படி தான் நடக்கணுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி : மனைவியை மாடிக்கு தனியாக அழைத்துச் சென்ற கணவர், அதன் பிறகு செய்த விபரீத செயல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள முதலூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பெயர் பேபி. இவர்களுக்கு திருமணமாகி, சுமார் 17 ஆண்டுகள் ஆன நிலையில், இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்களும், ஒரு மகனும் உள்ளனர்.
லோகநாதன் மற்றும் பேபி ஆகியோர், சென்னை அருகேயுள்ள செங்கல் சேம்பர் ஒன்றில் தங்கி பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சில தினங்களுக்கு முன், இருவரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அதன் பிறகு, திருக்கோவிலூர் சென்று, பொங்கல் மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தாடையும் வாங்கியுள்ளனர்.
கதறி அழுத குழந்தைகள்
இதனிடையே, லோகநாதன் தனது வீட்டின் அருகேயுள்ள கொட்டகை ஒன்றில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனை அவரின் தாய் கவனித்து விட, சத்தம் போட்டு, ஊரைக் கூட்டியுள்ளார். இதில், லோகநாதனின் குழந்தைகளுக்கும் எழுந்து கொள்ள, தந்தையின் நிலையைக் கண்டு, கதறி அழுததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், தற்கொலைக்கு முயன்ற லோகநாதனை காப்பாற்றினர்.
அதிர்ச்சி தகவல்
லோகநாதனை மீட்டவர்கள், அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு தான், தனது மனைவி பேபியை லோகநாதன் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
நடத்தையில் சந்தேகம்
முன்னதாக, நேற்று இரவு வழக்கம் போல, மனைவி மற்றும் குழந்தைகளுடன் படுக்கச் சென்ற லோகநாதன், திடீரென இரவு 11 மணியளவில், தனது மனைவியை தனியாக அழைத்ததாக கூறப்படுகிறது. பேபியை மாடிக்குத் தனியாக வரச் சொன்ன லோகநாதன், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களாக, உனது நடத்தை சரியில்லை, வேறு ஒருவருடன் நீ பழகி வருகிறாய் எனக் கூறி, கோபத்தில் திட்டித் தீர்த்ததாக கூறப்படுகிறது.
விபரீத முடிவு
இதன் காரணமாக, இருவருக்கும் இடையில், வாக்குவாதம் வலுத்துள்ளது. இதில், கடும் கோபம் அடைந்த லோகநாதன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவி பேபியை சரமாரியாக தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் கழுத்தை அறுத்ததாக கூறப்படும் நிலையில், அடுத்ததாக, மனைவியின் உடலையும் கோபத்தில் கிழித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், தான் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தான், தற்கொலைக்கு முயன்றுள்ளார் லோகநாதன். அவருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வரும் நிலையில், பேபி கொலை செய்யப்பட்ட தகவலறிந்து அங்கு வந்த போலீசார், இது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமணமாகி, 17 ஆண்டுகள் ஆன பிறகும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, கணவர் செய்த இந்த செயல், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
