முதன்முதலாக மனைவியிடம் காதலை சொன்ன இடத்திற்கு.. 27 வருஷம் கழித்து போனபோது.. அதே இடத்தில் வைத்து நடந்த விவரீதம்
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்து: இங்கிலாந்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தன் காதலியிடம் காதலை சொன்ன இடத்திற்கே மீண்டும் சென்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள அல்ட்ரிஞ்சம் என்ற பகுதியை சேர்ந்தவர் 54 வயதான Dr. ஜேமி பட்லர். பட்லருக்கு திருமணமாகி இரட்டையர்களான இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மலையுச்சிக்கு சென்ற ஜோடி:
திருமணமாகி பல வருடங்கள் ஆனா நிலையில், பட்லருக்கு தன் மனைவியிடம் முதன்முதலாக தன் காதலை வெளிப்படுத்திய அதே இடத்துக்குச் சென்று, மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். அந்த திட்டத்தின் படி, கணவனும் மனைவியுமாக ஸ்ட்ரைடிங் எட்ஜ் என்ற மலையுச்சிக்கு சென்றுள்ளனர். அப்போது பட்லரின் மனைவி களைத்து போய் உட்கார்ந்துத்துள்ளார். ஆனால், பட்லரோ சும்மா இல்லாமல் 27 ஆண்டுகளுக்கு முன் காதலைச் சொன்ன அந்த இடத்தைத் தேடிச் சென்றிருக்கிறார்.
காவல் துறையினருக்கு தகவல்:
அதன்பின், பட்லரின் மனைவி என்னடா தனக்கு முன் சென்ற கணவனை வெகு நேரமாக காணாததால், அவரைக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறார். ஆனால், அவரிடமிருந்து சத்தம் எதுவும் வராததால் பயந்துபோன காவல் துறையினருக்கு தகவல் அளித்திருக்கிறார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினருடன் விரைந்து வந்து பார்க்க்கையில் பட்லர் மலையுச்சியின் கீழே விழுந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். பட்லர் பலத்த காயம் காரணமாக உயிரிழந்துவிட்டிருக்கிறார்.
நீதிமன்ற விசாரணை:
அதுமட்டுமில்லாமல், பட்லர் உயிரிழந்த நேரத்தில், அவர் கால் பந்து அணி ஒன்றின் மருத்துவராக பணியாற்றிவந்துள்ளார். அப்போது பட்லரின் மீது சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட நிலையில் அவரே தன் உயிரை மாய்த்துக் கொண்டாரா என்பதை அறிவதற்காக நீதிமன்ற விசாரணை ஒன்றிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதையடுத்து, பட்லர் அப்படி எதுவும் செய்யவில்லை எனவும், அவர் தவறி விழுந்துதான் உயிரிழந்துள்ளார் என்ற முடிவுக்கு நீதிமன்றத்தின் சார்பில் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி வந்துள்ளார்.

மற்ற செய்திகள்
