கள்ளக்காதல் உறவு வைத்து இருந்ததற்காக பணி நீக்கம் செய்ய முடியாது.. குஜராத் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Pandidurai T | Feb 17, 2022 03:44 PM

அகமதாபாத்:  "கள்ளக்காதல் உறவு என்பது சமுதாயத்தின் பார்வையில் ஒழுங்கீனமானதாக கருதப்பட்டாலும், அதை குற்றமாக கருதி அரசு ஊழியரை பணியில் இருந்து நீக்க முடியாது" என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Gujarat High Court rules in the case of a sacked policeman

அரசாங்க ஊழியர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் பனியில் தவறிழைத்தால் அதற்காக துறை ரீதியான விசாரணை நடைபெறும். அந்த விசாரணையில் அவர்கள் தவறு செய்திருந்தது நிரூபிக்கப்பட்டாலே அந்த குற்றத்திற்கேற்றவாறு தண்டனை அளிக்கப்படும். அது நிரந்தரப் பனி நீக்கமாகவும் இருக்கலாம். ஆனால் அந்த தீர்ப்பை எதிர்த்து எல்லா நீதிமன்றங்களில் நியாயம் கேட்கும் உரிமை பதவி நீக்கம் செய்யப்பட்டவருக்கு உண்டு. அசைக்கமுடியாத சாட்சிகள், மறுக்க முடியாத குற்றம் இருந்தால் தான் காவல்துறையால் வெற்றி காணமுடியும். அதேபோன்று  காவலர் ஒருவர் தகாத உறவால் பணியை இழந்து, நீதிமன்றத்தில் நீதி கோரிய சம்பவம் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.

குஜராத்தை சேர்ந்த காவலர் ஒருவர், தான் வசித்து வந்த காவலர் குடியிருப்பில் உள்ள விதவையுடன் தகாத உறவு வைத்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவி, பிள்ளைகள் உள்ளனர். இதனால், இவர் நடத்தை சரியில்லை என கூறி கடந்த 2013ம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Gujarat High Court rules in the case of a sacked policeman

அந்த மனுவில், "விதவைப் பெண்ணும் நானும் முழு விருப்பத்தோடு,  இருப்பதாக ஒப்புக்கொண்ட பிறகும், காவல் துறை முறையாக விசாரிக்காமல் எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. எந்த சூழலிலும் அந்த பெண்ணை ஏமாற்றவில்லை. எனவே, என்னை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும்" என்று கோரினார். இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சங்கீதா விஷேன் முன்பு கடந்த 8ம் தேதி விசாரணைக்கு வந்தது.  அப்போது,  "மனுதாரர் கட்டுப்பாடுகள் நிறைந்த காவல்துறையில் பணி புரிந்தாலும், தகாத உறவு என்பது சமுதாயத்தில் பார்வையில் ஒழுங்கீனமானதாக பார்க்கப்பட்டாலும், அதனை நடத்தை தவறாக கருதி அவரை பணியில் இருந்து நீக்க முடியாது.

இது அவரது தனிப்பட்ட வாழ்க்கையுடன் தொடர்புடையது. அவர் அப்பெண்ணை மிரட்டவோ, பணம் பறிக்கவோ இல்லை. எனவே, நடத்தை விதிகள் 1971க்கும் அவரை பணி நீக்கம் செய்ததற்கும் தொடர்பில்லை.  எனவே, அவரது பணி நீக்கத்தை ரத்து செய்வதுடன், அகமதாபாத் காவல்துறை அவரை உடனடியாக பணியமர்த்த வேண்டும். மேலும், பணி நீக்கம் செய்த 2013ம் ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரையிலான காலத்துக்கு ஊதியத்தின் 25 சதவீதத்தை வழங்க வேண்டும்,’ என உத்தரவிட்டார்.

Tags : #GUJARAT HIGH COURT #POLICE #AFFAIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat High Court rules in the case of a sacked policeman | India News.