வெளிநாட்டு பெண்ணுடன் மலர்ந்த காதல்.. இது கண்டிப்பா நடக்காது.. மறுத்த மாமனார்.. அவர மருமகன் வழிக்கு கொண்டு வந்தது தான் ஹைலைட்டே
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப் பிரதேசம் : வெளிநாட்டு பெண்ணைக் காதலித்து வந்த இந்திய இளைஞர், தனக்கு காதலி கிடைக்க வேண்டி செய்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியர் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அவினாஷ் டோஹர். இவருக்கும், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பட்வா என்ற பெண்ணிற்கும், சமூக வலைத்தளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் நட்பாக பழகிய இருவரும், நாளடைவில் தங்களுக்குள் காதலை வளர்த்துள்ளனர். மேலும், திருமணம் செய்து கொண்டு ஒன்றாக இணைந்து வாழவும் விருப்பப்பட்டுள்ளனர்.
காதலர்கள் உறுதி
ஆனால், வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த அவினாஷ் மற்றும் பட்வா ஆகியோர் இணைந்து கொள்வதில் பல சிக்கல்கள் இருந்தது. இருவரும் வேறு மதத்தைச் சார்ந்தவர்கள். இதனால், இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் சில நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், வாழ்நாள் முழுவதும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதில் காதலர்கள் இருவரும் உறுதியாக இருந்தனர்.
தந்தை மறுப்பு
இதனைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் இருந்து, தனது காதலியின் நாடான மொரோக்கோவிற்கு இரன்டு முறை அவினாஷ் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர், காதலி பட்வாவின் பெற்றோர்களை நேரில் சந்தித்து, தனது காதலுக்கு சம்மதம் வாங்கவும் முயற்சி செய்துள்ளார். ஆனால், பட்வாவின் தந்தை, ஆரம்பத்தில் சம்மாதம் தெரிவிக்கவில்லை.
கண்டிஷன் போட்ட மாமனார்
இருந்த போதும், விடாமல் மாமனாரை சம்மதம் சொல்ல வைக்கும் முயற்சியில் அவினாஷ் இறங்கியுள்ளார். இதனால், வேண்டாம் என மறுத்த மாமனார், சில கண்டிஷன்களை பிறகு வைத்துள்ளார். எனது மகளை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், மொராக்கோவிற்கு வந்து செட்டில் ஆகி விட வேண்டும் என்பது தான் அந்த கண்டிஷன்.
வற்புறுத்த மாட்டேன்
ஆனால், இதனை முற்றிலும் மறுத்த அவினாஷ், என்னால் மொரோக்காவில் வந்து வாழ முடியாது என்றும், எனது ஊரில் தான் வாழ்வேன் என்றும் தெரிவித்துள்ளார். அதே போல, தான் மதம் மாற முடியாது என்பதையும் உறுதியாக கூறிய அவினாஷ், பட்வாவையும் மதம் மாறிக் கொள்ளும் படி, வற்புறுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வென்ற காதல்
மாமனாரின் நிபந்தனையை அவினாஷ் ஏற்காத நிலையில், தொடர்ந்து தன் காதலுக்கு வேண்டி போராடியுள்ளார். இறுதியில், அவினாஷ் - பட்வா ஆகியோருக்கு இடையேயுள்ள காதலின் திடமான உறுதியை உணர்ந்து கொண்ட பெண்ணின் தந்தை, மகளின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவினாஷ் - பட்வா ஆகியோரின் திருமணமும் சில தினங்களுக்கு முன் நடைபெற்றுள்ளது. தான் காதலித்த பெண்ணையே கரம் பிடித்ததால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே போயுள்ளார் அவினாஷ்.
வாழ்த்து
ஒரே பகுதியிலுள்ள பெண்ணை காதலித்தால் கூட, பல்வேறு சிக்கல்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில், வேறு நாட்டைச் சேர்ந்த பெண்ணை காதலித்த இளைஞர், தன் காதலில் உறுதியாக நின்று, காதலித்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டுள்ள நிலையில், இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
