வாழ்க்கை எப்போ வேணாலும் மாறலாம்.. ‘ஆசிட் வீசிய காதலன்’.. கடைசியில் நடந்த உருக்கமான சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Dec 26, 2021 11:54 AM

காதலியின் முகத்தில் ஆசிட் வீசிய காதலனின் மனம் திருந்தி அவரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Woman marries boyfriend who attacked her with acid

துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்ஹெண்டிரூன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹசிம் ஒசன் செடிக் (வயது 23). அதே பகுதியைச் சேர்ந்தவர் இளம் பெண் பெர்பின் ஒசிக் (வயது 20). இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். வழக்கம்போல காதலர்களுக்குள் ஏற்படும் சண்டைதான் இவர்களுக்கு இடையே அடிக்கடி ஏற்பட்டுள்ளது.

Woman marries boyfriend who attacked her with acid

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவர்களுக்குள் நடந்த சிறிய சண்டை பெரியதாக மாறி பிரேக்கப் வரை சென்றுள்ளது. இதனை அடுத்து பெர்பின் ஒசிக் தனது காதலனை விட்டு பிரிந்து விட்டார். இந்த ஆத்திரத்தில் பெர்பின் ஒசிக்கின் மீது ஹசிம் ஒசன் செடிக் ஆசிட் ஊற்றினார். இதில் பெர்பின் ஒசிக்கின் உடலின் பெரும்பாலான பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதில் பெர்பின் ஒசிக்கிற்கு ஒரு கண் பார்வை பறிபோனது.

Woman marries boyfriend who attacked her with acid

இதனை அடுத்து ஹசிம் ஒசன் செடிக்கை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிறையில் இருந்த ஹசிம் ஒசன் செடிக், தனது தவறை உணர்ந்து பெர்பின் ஒசிக்கிற்கு மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உடனே அதற்கு அவரும் பதில் கடிதம் எழுதியுள்ளார். இப்படி இவர்கள் மாறி மாறி கடிதங்களை பரிமாறிக் கொண்டு வந்துள்ளனர். இதனால் இவர்களது காதல் மீண்டும் புதுப்பித்துள்ளது.

Woman marries boyfriend who attacked her with acid

இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக வரும் 2022 மே 31-ம் தேதி வரை திறந்தவெளி சிறையில் உள்ளவர்களை ஜாமினில் விடுதலை செய்ய துருக்கி அரசு அனுமதி அளித்தது. இந்த உத்தரவால் சிறையில் இருந்து ஹசிம் ஒசன் செடி ஜாமினில் வெளியே வந்தார். இதன் பின்னர் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Woman marries boyfriend who attacked her with acid

இதுகுறித்து பேசிய பெர்பின் ஒசிக், ‘நான்கு சுவர்களுக்கு இடையில் அவர் அடைந்திருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பல கடிதங்கள் எழுதியுள்ளோம். அவருக்கு நான் என்னை முழுவதுமாக கொடுத்து விட்டேன். அவர் என்னை மிகவும் நேசிக்கிறார். நானும் அவரை அதிகமாக நேசிக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : #LOVER #ACIDATTACK #MARRIAGE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman marries boyfriend who attacked her with acid | World News.