“ராத்திரி ஆனா சுடுகாட்டுக்கு போய்”.. இந்தியாவில் மந்திர, தந்திர, சூனியம் கற்றுக்கொண்டிருந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 30, 2020 04:04 PM

இந்தியாவில் வந்து மாந்திரீகம், மந்திர தந்திரங்கள், சூனியம் உள்ளவற்றைக் கற்றுக் கொண்டிருந்த அமெரிக்க பெண்ணின் மர்மமான மரண சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

america woman mysterious dead who was learning blackmagic in India

அமெரிக்காவை சேர்ந்த Cynthia Mitchell என்கிற பெண்மணி கடந்தாண்டு நவம்பர் மாதம் 15-ஆம் திகதி இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசிக்கு வந்ததுடன் அங்குள்ள மலைப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கி மாந்தீரீகம், சூனியம் உள்ளிட்டவற்றின் மீதான ஆர்வத்தின் காரணமாக அவற்றை கற்றுவந்தார்.

இந்நிலையில் அவர் தங்கியிருந்த விடுதியில் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது பிரேதம் கைப்பற்றப்பட்டு பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் அமெரிக்க தூதரகத்துக்கு தகவல் தரப்பட்டதை அடுத்து அவர்கள் அளித்த அறிவுறுத்தலின் பேரில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Cynthiaவுடன் கொஞ்ச நாள் தங்கி இருந்த அவரது தோழி இதுபற்றி கூறும்போது, மாந்திரீகத்தின் மீதான ஈடுபாடு அதிகம் கொண்ட Cynthia நள்ளிரவு நேரத்தில் கூட சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்வார் என்றும், வெளிநாட்டு வம்சாவளியை சேர்ந்த அகோகரிகளுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாகவும், அவர்களுடனே இருந்த  Cynthia கஞ்சா போன்ற போதை பொருட்களையும் அவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இறுதி தருவாயில்  Cynthia உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும் அவரது தோழி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. America woman mysterious dead who was learning blackmagic in India | India News.