“உன்னோட ‘அந்த’ வீடியோவ நெட்ல விட்ருவேன்!”.. ‘உருகி உருகி பழகுன ‘முகநூல்’ தோழி செஞ்ச ’வேலை’!.. பறிபோன பணம்... பயத்தில் தவிக்கும் சென்னை இளைஞர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஆபாச வீடியோவை வெளியிட்டுவிடுவதாகக் கூறி இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் போலீஸாரால், தேடப்பட்டு வருகிறார்.
![Facebook girlfriend blackmail chennai man using naked video chat Facebook girlfriend blackmail chennai man using naked video chat](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/facebook-girlfriend-blackmail-chennai-man-using-naked-video-chat-1.jpg)
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி நவீன் என்பவர், முகநூலில் அறிமுகமான பெண் ஒருவருடன் வைபர் செயலி மூலம் பேசிப் பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் நவீன், உடலில் உடைகளேதும் இன்றி நிர்வாணமாகவே அந்த பெண்ணுடன் வீடியோ காலில் பேசியுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாகக் கூறியுள்ளார்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் இருக்க, அப்பெண் 1000 யூரோக்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அப்பெண் குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு 80 ஆயிரம் பணம் அனுப்பியுள்ளதாகவும் கூறி, நவீன் தற்போது சென்னை சௌந்தரபாண்டியனார் அங்காடி (பாண்டி பஜார்) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் அப்பெண் தேடப்பட்டு வருகிறார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)