கொரோனா பரிசோதனை குச்சியை மூக்கில் விடும்போது விபரீதம்!.. பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. இந்தியாவை உலுக்கிய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்சவுதியில் அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தை ஒன்றை அவருடைய பெற்றோர்கள் ஷாக்ரா பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது குழந்தைக்கு கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

இந்த பரிசோதனையின்போது பயன்படுத்தப்படும், அதாவது மாதிரிகளை எடுப்பதற்காக மூக்கில் விடப்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும் போது குச்சி உடைந்தை அடுத்து, அதனை வெளியே எடுக்க முயன்றபோது குழந்தைக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளனர் மருத்துவர்கள். இதனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு குழந்தை சுயநினைவை இழந்து பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 24 மணி நேரம் கழித்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குழந்தையின் தந்தை, இந்த மருத்துவமனை சம்பவத்தை விவரித்து குழந்தைக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு, தான் அனுமதி கொடுக்கவில்லை என்றும், ஆனால் மருத்துவர்கள் இதை வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை முடிந்த பின் குழந்தை நல மருத்துவர் குழந்தைக்கு பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் ஆனால் சிறப்பு மருத்துவர் விடுப்பில் இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட காரணம் மயக்க மருந்துதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக குழந்தையின் உடல் நிலை மோசமாக இருந்ததை உணர்ந்த தந்தை குழந்தையை சிறப்பு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை கேட்டுள்ளார். ஆனால் அம்புலன்ஸ் வருவதற்குத் தாமதமாகியதை அடுத்து குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையின் மரணம் மற்றும் நிலைமை தவறாகக் கையாண்டது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள குழந்தையின் தந்தை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்கு சுகாதாரத்துறை அமைச்சர், குழு ஒன்றை அமைத்தள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்
