'கதறிய இளைஞர்'... 'எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு கொடூரம் நடக்கக் கூடாது'... இதயத்தை நொறுக்கிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Jul 20, 2020 04:13 PM

கொரோனா உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ள இந்த நேரத்தில், இதுவரை, 1 கோடி பேருக்குமேல் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பல லட்சம் மக்கள் கொரோனாவால் உயிரிழந்துளர்கள். இந்நிலையில் பாலஸ்தீன நாட்டில் நடந்த சம்பவம் பலரது நெஞ்சங்களை நொறுக்கியுள்ளது. பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த ஜிகாத் அல் ஸ்வைட்டி என்ற இளைஞரின் தாய் ரஸ்மி சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஹெப்ரான் மாநில மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

Man Climbed Up Hospital Window To See COVID-19 Positive Mother

தனது அம்மாவைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே தாய் இறந்துவிட்டார் என்ற செய்தியை மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தன்னை கஷ்டப்பட்டு ஆளாக்கிய தாய் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும், ஜிகாத் கதறி அழுதார். அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு விடும் என்பதால் பெற்ற தாயை அவரால் பார்க்க முடியவில்லை. இதனால், மருத்துவமனையின் கட்டிடத்தில் ஏறி இறந்துபோன தனது தாயைச் சோகத்தோடு பார்த்த காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை கலங்கடித்தது.

30 வயதாகும் அந்த இளைஞன் தனது தாயின் உடலை எடுத்துச் செல்வதைப் பார்க்க மருத்துவமனை ஜன்னலில் சோகத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. இதைப் பார்த்த பலரது இதயங்களும் நொறுங்கிப் போனது. கடவுளே எதிரிக்குக் கூட இப்படி ஒரு நிலை வரக் கூடாது எனப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man Climbed Up Hospital Window To See COVID-19 Positive Mother | World News.