'இனிமேல் விஜயகாந்தின் பழைய கர்ஜனையை கேட்கலாம்'... மருத்துவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நலம் குறித்து அவரது, அக்குபஞ்சர் மருத்துவர் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர், பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில், ''விஜயகாந்த் தற்போது நல்ல நிலையில் இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை தற்போது காண முடிகிறது. மேலும் பள்ளி கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகள் எல்லாம் தற்போது தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் மீண்டும் அதே போல நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க அவர் விரும்புவதாகவும்'' மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே விஜயகாந்த்திற்கு உள்ள நரம்பியல் பிரச்சனை குறித்துப் பேசிய மருத்துவர், ''விஜயகாந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது. ஆனால் அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்காமல் விட்டுள்ளார்கள். அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்று சிகிச்சை எடுத்தும் நரம்பு ரீதியான பிரச்சனையைச் சரி செய்ய முடியவில்லை.
அதனால் தற்போது அக்குபஞ்சர் முறையில் அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு அறுபது நாள் சிகிச்சை மட்டுமே இருக்கும் நிலையில், சரியாக 3 மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என நம்பிக்கையாக இருக்கிறோம். மிக முக்கியமாக விஜயகாந்த்திற்கு அவரது பழைய கம்பீரமான குரல் வந்துவிட்டது. தற்பொழுது விஜயகாந்த் தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார்.
மேலும் அவருக்கு வழங்கப்பட்டு வந்த மற்ற சிகிச்சைகள் தற்போது குறைக்கப்பட நிலையில், அக்குபஞ்சர் முறையில் மட்டுமே அவருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது'' என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
